மரபுடைமை இதழ் வரவேற்கிறது

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் – பாரதிதாசன் உயிருக்கு நேரான அல்லது உயிரினும் மேலான தமிழில் அல்லது தமிழ் பற்றிய படைப்புகளை ஊக்கப் படுத்தும் வண்ணம் முத்தமிழ் இதழ் தொடங்கப் படுகிறது. இவ்விதழில் கல்வியாளர்களும், ஆய்வாளர்களும், மற்ற ஆர்வலர்களும் தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு பற்றிய படைப்புகளை வெளியிட வரவேற்கிறோம்.   ஏற்றுக் கொள்ளப் படும் கட்டுரைகள் கட்டுரை கிடைக்கப் பெற்ற ஒரு மாதத்தில் மின்னணு வடிவத்தில் இத்தளத்தில் வெளியிடப்படும். கட்டுரை படைப்போர், article@marabudaimai.com என்ற மின்னஞ்சலுக்கு கட்டுரைகளை Microsoft Word அல்லது RTF வடிவத்தில் Unicode – எழுத்துருவில் தட்டச்சு சய்து இணைப்பாக அனுப்பவேண்டும். கட்டுரையாளர்கள் தாங்கள் புகப்படத்தையும் இணைத்து அனுப்பலாம். இவ்விதழானது “செந்தமிழ்” என்ற பெயரில் தொடங்கப்பட்டு “மரபுடைமை” என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.