பல்லவர்கள் வளர்த்திட்ட இசைக்கலை – கி.அறவாழி, நார்வே

முன்னுரை

பல்லவர்களின் ஆட்சி (கி.பி. ஆறு முதல் கி.பி. ஒன்பது நூற்றாண்டு) தமிழகத்தில் பக்தி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தெய்வத் தமிழ் என அழைக்கப்படும் இந்த இலக்கியத்தை அவற்றால் பெருகச் செய்தது. அவர்களது காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ் பக்திப் பாடல்களைப் பாடி பரப்பினர்.

நாயன்மார்கள்

ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற நாயன்மார்கள் ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கினர், குறிப்பாக பல சிவன் கோயில்களைப் பற்றியவை. இன்றும் ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்கள் தங்கியுள்ளன.

அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் ஆயிரம் பாடல்களைப் பாடினார். இந்த மூன்று நாயன்மார்களின் பாடல்களையே “தேவாரம்” என்று அழைக்கப்பட்டது; இது தமிழ் பக்தி இலக்கியத்தில் சிறந்த இடத்தைப் பெற்றது. எட்டாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றிய தெய்வீக பாடல்களை இயற்றினார், அவை திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். இந்த இரு நூல்களும் தமிழுக்கு 1,050 பாடல்களை அற்புதமான களஞ்சியமாக அளித்தன.

இவைதவிர, பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்ட தனியடியார்கள் பாடிய பாடல்களும் பக்தி இலக்கியக்காலத்தில் சைவ சமய வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாக அமைந்து, தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் சமகாலத்தில் மிகுந்த பங்களிப்பு செய்தன எனலாம்.

ஆழ்வார்கள்

அதேபோல், ஆழ்வார்கள் பன்னிருவரும் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நூல் தொகுதியும் பல்லவர்களின் காலத்து தமிழ்மொழியைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எளிய தமிழ் உருவாக்கத்திற்கும் இந்த நூல்களின் பங்கையும் குறிப்பிடத்தக்கது.

சங்க காலம் மாறிய பின் நிகழ்ந்த  களப்பிரர் ஆதிக்கத்தின் காரணமாக வைணவ சமயமும் ஒளி குன்றி இருட்டடைந்தது. பின்னர், களப்பிரர் ஆட்சி முடிவடைந்து, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தில் செங்கோல் ஏந்திய நேரத்தில், சைவ சமயமும் வைணவ சமயமும் புத்துயிர் பெற்றன.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய பன்னிருவரின் படைப்புகள், தமிழ் மொழியின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டும் உறுதியான ஆதாரங்களாக இருந்து வருகின்றன.

மேலும், பல்லவர்களின் காலத்தில் எழுதப்பட்ட அவிநயம் மற்றும் யாப்பருங்கல விருத்தி போன்ற இலக்கண நூல்களும் இலக்கணத்தைக் குறித்த அறிவைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.

இசை

தமிழர் நாகரிகத்தின் நாட்டுக் கலைகளாகப் போற்றப்படும் இசை, நடனம், ஓவியம், சிற்பம் மற்றும் காவியம் ஆகிய கலை வடிவங்களை பல்லவ அரசர்கள் பெரிதும் போற்றி வளர்த்தனர். ஓவியமும் சிற்பமும் அவர்களது ஆட்சியின் உயர்ந்த மேன்மையை வெளிப்படுத்துகின்றன. இவர்களது குகைக் கோவில்கள், கயிலாசநாதர் கோவில் மற்றும் வைகுந்தப் பெருமாள் கோவில் போன்ற கற்றளிகள் இக்கலையின் சிறப்பை அருகே சென்று உணர்ந்து ரசிக்கச் செய்கின்றன.  இசை மற்றும் நடனத்தையும் இவர்களின் கோவில்களில் கல்வெட்டுகளாக, சிற்பங்களாக செதுக்கியும் வடிவமைத்தும் வைத்தனர்.

மகேந்திரவர்மனும் இசையும்

பல்லாவரம் குகைக் கல்வெட்டில் மகேந்திரன் தன்னை ‘சங்கீரண சாதி’ என அழைத்துள்ளார் (சங்கீரனம் என்பது ஒரு மத்தள வகை). பிற்கால ஆய்வுகளின்படி, தாள வகைகளில் (சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரனம்) சங்கீரனத்தை முதன்முதலாகக் கண்டறிந்து அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் நிறுவியவர் மகேந்திரன் எனத் தெரிகிறது.

குடுமியான் மலைக் கல்வெட்டு

குடுமியாமலைக் கல்வெட்டில் ‘சித்தம் நமசிவாய’ என்று தொடங்கி, பலவகை பண்களையும் தாள அமைப்பையும் விளக்கி, ‘இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய’ என முடிக்கின்றது. இதன் மூலம், ‘மகேந்திரன் கண்டறிந்த பண்கள் எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் ஏற்றவை; ஏழு நரம்புகளை உடைய வீணைக்கும் பொருந்தும்’ என்பது தெரியவருகிறது. அன்றோ தொன்றோ, ஏழு நரம்புகளைக் கொண்ட வீணையே நிலைத்திருந்ததாக காணப்படுகிறது. இதற்கு மாற்றாக, எட்டு நரம்புகளைக் கொண்ட புதிய வீணையை மகேந்திரன் கண்டுபிடித்தார் எனத்  தோன்றுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*